6GB ரேம், 6000mAh பேட்டரி… ரூ.9,999-க்கு ரிலீஸ் ஆன ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நார்சோ 80x 5ஜி மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 32MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. அளவில் 7.94 மில்லிமீட்டரில் உருவாக்கப்பட்டு இருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் மிக மெல்லிய தோற்றம் கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 6 கொண்டுள்ளது. இத்துடன் 6000mAh பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், அல்ட்ரா லீனியர் ஸ்பீக்கர், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் பர்பில் மற்றும் ஆனிக்ஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

விலையை பொருத்தவரை ரியல்மி நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 10,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 ஆகும். இருப்பினும அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 10,799 என மாறியுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் ஜூன் 23-ம் தேதி தொடங்குகிறது.

Leave a Comment