ஸ்மார்ட்போன் உலகில் பேட்டரி ஆயுள் என்பது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இந்தச் சவாலை முறியடிக்கும் வகையில், சீன நிறுவனமான ரியல்மி (Realme), தனது புதிய Realme P4 Power 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. சுமார் 10,001mAh திறன் கொண்ட பிரம்மாண்ட ‘டைட்டன்’ பேட்டரியுடன் இந்த போன் வெளியாக உள்ளது.
பாகுபலி பேட்டரி.. பவர்ஃபுல் பெர்பார்மென்ஸ்!
இந்த போனின் மிக முக்கிய அம்சமே அதன் பேட்டரிதான். பொதுவாக நாம் பயன்படுத்தும் பவர் பேங்க்குகளே 10,000mAh திறனில்தான் வரும். ஆனால், அந்த வசதியை ரியல்மி தனது போனுக்குள்ளேயே கொண்டு வந்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம் என்றும், சாதாரணப் பயன்பாட்டில் ஒரு வாரம் வரை சார்ஜ் நிற்கும் என்றும் நிறுவனம் டீசர் வெளியிட்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
டிஸ்ப்ளே:
6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசல்யூஷன் கொண்டது.
சிப்செட்:
அதிவேக செயல்பாட்டிற்காக MediaTek Dimensity 7400 Ultra சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
கேமரா:
50MP மெயின் கேமரா, 8MP அல்ட்ரா-வைட் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பின்புறம் உள்ளன. முன்பக்க செல்பீ கேமரா 16MP ஆகும்.
சார்ஜிங்:
இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், மற்ற சாதனங்களை சார்ஜ் செய்ய 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
எடை:
இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும், இதன் எடை வெறும் 218 கிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது லான்ச்?
இந்த Realme P4 Power 5G ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 29, 2026 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வரும். இதன் விலை சுமார் ₹19,999 முதல் ₹24,999 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.