realme நிறுவனம் தனது பட்ஜெட் சீரியஸில் புதிய மொபைலை களம் இறக்க உள்ளது. பட்ஜெட் போனில் சக்கைப்போடு போடும் நார்சோ 80 சீரியசில் இந்த மொபைல் வெளிவர உள்ளது. ஏற்கனவே realme நார்சோ 80 ப்ரோ, நார்சோ 80 x போன்ற மொபைல்கள் விற்பனைக்கு உள்ள நிலையில் நார்சோ 80 லைட் மொபைலை இந்தியாவில் ஜூன் மாதம் கொண்டு வர உள்ளது realme நிறுவனம்.
realme நார்சோ 80 லைட் மொபைல் இந்தியாவின் நீண்டகால 5G பேட்டரி சாம்பியன் என்ற அடைமொழியுடன் வெளிவர உள்ளது. காரணம் அதில் கொடுக்கப்பட்டுள்ள 6000mah திறன் கொண்ட பேட்டரி பவர்தான். இதன் மூலம் நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒருநாள் முழுவதும் பயன்படுத்தலாம் என்று realmeநிறுவனம் தெரிவிக்கிறது.

இவ்வளவு பெரிய பேட்டரி கொண்டிருந்தாலும் மொபைலின் தடிமன் வரும் 7.49mm தான். இந்த மொபைலை பயன்படுத்தி உங்களின் பிற சாதனங்களுக்கு ரிவர்ஸ் சார்ஜிங் செய்யலாம். இதில் டைமண்ட் சிட்டி 6300 பொருத்திய சிப்செட் வருகிறது. இதில் HD+ திரையுடன் 120 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது.
இதில் 4+64 மற்றும் 6+128 போன்ற வேரியண்ட்களில் வருகிறது. இதன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் இதன் 4 ஜிபி ரேம் வகை மாடலின் விலை 9999 மற்றும் 6ஜிபி ரேம் வகை மாடலின் விலை 11999 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.