இன்றைய இணைய ஆதிக்க உலகில் சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிறுவனங்கள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஹேக்கிங், ஸ்பாம் மூலம் தகவல் திருட்டு, பணம் பறித்தல் போன்றவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலை இருக்கிறது.
இதனால், தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகிவிடுகிறது. இதற்காக பல்வேறு டெக் நிறுவனங்களும் two point authentication, Encryption போன்ற பாதுகாப்பு வசதிகளை அளிக்கின்றன. இந்த சூழலில் கூகுள் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பாக சில அப்டேட்டுகளை அளித்திருக்கிறது.
Recovery Contacts
கூகுள் வழங்கும் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த உங்களுக்கு ஒரே ஒரு கூகுள் கணக்கு இருந்தால் மட்டுமே போதும். அதை வைத்து மெயில், டாக்ஸ், ஸ்லைடு, யூடியூப் உள்ளிட்ட கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நிலையில், உங்கள் கூகுள் கணக்கை நீங்கள் இழந்துவிட்டால், அல்லது பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அதை ரெக்கவரி செய்ய உங்களின் தொலைபேசி எண் அல்லது இன்னொரு மெயில் போன்றவற்றைக் கொடுக்கும் வசதி இருந்து வந்தது.
இதில்தான் Recovery Contacts என்ற புதிய பாதுகாப்பு வசதியைக் கொண்டுவந்திருக்கிறது கூகுள். உங்கள் போனை நீங்கள் தொலைத்துவிட்டால் அல்லது ஹேக்கிங்கில் அக்கவுண்ட் பாதிக்கப்பட்டால், இந்த Recovery Contacts வசதி மூலம் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரின் போன் நம்பர்களைக் கொடுத்து அதன்மூலம் உங்கள் அக்கவுண்டை ரெக்கவரி செய்துகொள்ள முடியும். இது உபயோகமாக இருக்குமா இல்லையா என்பது குறித்து ஏற்கனவே விவாதங்கள் தொடங்கி விட்டன.