6000mah பேட்டரி 33w சார்ஜர்.. 50mp கேமரா.. விரைவில் வெளியாகும் ரெட்மி போன்.. என்ன மாடல் ?

ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய மொபைலை இந்தியாவில் களம் இறக்க உள்ளது. அந்த வகையில் அதன் redmi 15c மாடல் தற்போது இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. பட்ஜெட் விலையில் தரமான மொபைல்களை வழங்கும் ரெட்மி இந்த புதிய மாடலில் என்னென்ன சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

இதில் 6.9 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 120hz ரெப்ரெஷ் ரேட்டுடன் 1000 நீட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெச் டச் சாம்பலிங் ரேட் உடன் அருமையான டிஸ்ப்ளே வருகிறது. 120hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருவதால் பயன்படுத்துவதற்கு ஸ்மூத்தாக இருக்கும். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மீடியாடெக் ஹீலியோ ஜி81 பிராசசர் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தினசரி உபயோகத்திற்கு எந்த ஒரு இடையூறும் இன்றி சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல 50 எம்பி ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. மற்றும் முன்புற செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 எம்பி கேமராவுடன் இந்த ரெட்மி 15 சி மாடலில் வருகிறது. ரேம் அமைப்பை பொறுத்தவரை இதில் 4ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது.

மேலும் இதில் மெமரி நீட்டிப்பு செய்ய தனி எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இதில் 6000mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு 33w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகிறது சைடு மவுண்டன் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆதரவும் இதில் கிடைக்கிறது. இணையதளத்தில் வெளியாகி இருக்கும் லீக்ஸ் அடிப்படையில் இதன் விலை டாப் மாடல்13,000 பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment