9000mah பேட்டரி..‌ 2k டிஸ்ப்ளே.. 8 ஜிபி ரேம் பட்ஜெட்டில் அறிமுகமான redmi pad 2

ரெட்மி நிறுவனம் புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. redmi pad 2 பட்ஜெட் விலையில் பலவித சிறப்பம்சங்களை கொண்டு வெளியாகி உள்ளது.

redmi pad 2 சிறப்பம்சங்கள் :

இதில் 11 இன்ச் 2.5 k 10 பிட் டிஸ்ப்ளே 90hz ரெஃப்ரெஷ்ரேட்டுடன் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் லெவல் ips lcd உடன் வருகிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 100 அல்ட்ரா ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் இதில் 8 gb ddr4x ரேம் மற்றும் 256 gb இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

redmi tab
redmi tab

மேலும் இதில் ufs 2.2 ஸ்டோரேஜ் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் உடன் வருகிறது. கேமரா அமைப்பை பொறுத்தவரை 8 மெகாபிக்சல் பின்புறமும் 5 மெகாபிக்சல் முன்புற கேமராவும் கொண்டுள்ளது. மேலும் இதில் டால்பி அட்மாஸுடன் நான்கு ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. மேலும் இந்த டேப்லெட் வகையை பொறுத்தவரை ஸ்மார்ட் பெண் பயன்படுத்தி கொள்ளலாம்.

மலும் இதில் சர்க்கிள் டு சர்ச், ஜெமினி ஏஐ போன்ற வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த பேடில் 9000 பேட்டரி இதை சார்ஜ் செய்வதற்கு 18 w சார்ஜர் வசதியும் கொண்டுள்ளது மேலும் இதில் 4g, wi-fi, ப்ளூடூத், 3.5 mm ஆடியோ ஜாக் usb டைப் சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி வசதியும் உள்ளது.

விலைப் பொருத்தவரையில் 4ஜிபி +128 ஜிபி wi-fi வேரியன்ட் 13,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் wi-fi மற்றும் 4ஜி உடனான வேரியண்ட் 6ஜிபி+ 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது 15,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 17,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த டேப்லெட் ஜூன் 24 தேதி முதல் அதிகாரப்பூர்வ இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது.

 

Leave a Comment