சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A55 ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
சலுகை விவரங்கள்:
இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A55 ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியண்ட் விலை ரூ.36,999-இல் இருந்து தற்போது ரூ. 25,999 என மாறியுள்ளது. இந்த சலுகை அமேசான் இந்தியா வலைதளத்தில் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ அமேசான் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது அமேசான் பே கணக்கில் ரூ. 779 கேஷ்பேக் பெற முடியும்.
இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து கூடுதல் தள்ளுபடி பெற முடியும்.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A55 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
சாம்சங் கேலக்ஸி A55 ஸ்மார்ட்போன் சாம்சங் எக்சைனோஸ் 1480 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நான்கு ஆண்டுகள் ஓ.எஸ். அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.