சாம்சங் நிறுவனம் தங்களது புதிய வகை மொபைலான சாம்சங் கேலக்ஸி M34 5G மொபைலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைலானது விரைவில் அமேசான் பிரைம் சேலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களை காணலாம்.

சாம்சங் கேலக்ஸி M34-ன் எதிர்பார்க்கப்படும் விலை:
இந்த மொபைலானது ரூ.21000 முதல் ரூ.24000க்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலானது நமக்கு இரண்டு வகைகளில் 6ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128 ஜிபி என இரு வகைகளில் கிடைகின்றது.
மொபைலின் வண்ணங்கள்:

- Midnight Blue
- Prism Silver
- Waterfall Blue
திரை அமைப்பு:

சாம்சங் கேலக்ஸி M34 6.7இன்ச் FHD திரையுடன் 5ஜி, 4ஜி எல்.டி.ஈ, டூயல் சிம், 3ஜி வசதி கொண்ட மைக்ரோ சிம், ப்ளூடூத் போன்ற அனைத்து வகையான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
ஆண்டிராய்டு – ஆண்டிராய்டு 12
கேமரா:

இந்த மொபைலானது 64– பின்புற குவாட் கேமராவையும் செல்ஃபி பிரியர்களுக்கென 16– முன்புற கேமரா வசதியையும் கொண்டுள்ளது. மேலும் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.
பேட்டரி:
இதன் 6000mAh பேட்டரி அமைப்பானது இதன் தனி சிறப்பம்சம் எனவே கூறலாம். மேலு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினையும் பெற்றுள்ளது. எனவே நமது மொபைலின் சார்ஜ் ஒரு நாளுக்கு மேலாகவே இருக்கும் என கூறலாம்.
விலை:
6GB+ 128GB – Rs.17,999
8GB+ 128GB – Rs.20,999