8GB ரேம், 6000mAh பேட்டரி… சாம்சங் போனுக்கு ரூ. 10,500 தள்ளுபடி… அமேசான் அதிரடி சம்பவம்..!

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவை விளங்குகின்றன. இரு விற்பனை தளங்களிலும் எப்போதும், ஏதேனும் சலுகைகள், தள்ளுபடி வழங்கப்படுவது வாடிக்கையான விஷயம் தான். பெரும்பாலும் ஸ்மார்ட்போன், மின்சாதனங்களுக்கு அடிக்கடி சலுகைகள் அல்லது தள்ளுபடி வழங்கப்படும்.

அந்த வரிசையில் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் பிரபலமாக கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போனிற்கு தற்போது அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரூ. 25,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சிறப்பு சலுகையின் கீழ் ரூ. 15,499 விலையில் கிடைக்கிறது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 10,500 வரை குறைவு ஆகும்.

விலை குறைப்பு கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கு வழங்கப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகையில் வாங்கிட முடியும். இதில் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ. 2583 செலுத்த வேண்டியிருக்கும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.

சிறப்பம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 1380 பிராசஸர், வேப்பர் கூலிங் சேம்பர், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6.1 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சாம்சங் வாலட், நாக்ஸ் செக்யூரிட்டி, அதிகபட்சம் நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது. இத்துடன் 3.5mm ஜாக், பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்றுவித வெர்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் தண்டர் கிரே மற்றும் டே-பிரேக் புளூ என இரு நிறங்களில் கிடைக்கிறது.

Leave a Comment