சாம்சங் நிறுவனம் இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான அமேசானுக்கு என்று பிரத்தியேகமாக அதன் m-சீரிஸ் மாடலை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் m-36 மொபைல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. மிட் ரேன்ஜ் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய இந்த மொபைல் வருகிற 12-ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

samsung galaxy m36 5g சிறப்பு அம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமலோட் 120hz ரெஃப்ரஸ் ரேட் சப்போர்டுடன் வருகிறது. கேமரா அமைப்பை பொருத்தவரை 50 எம்பி ஓ ஐ எஸ் உடன் மெயின் கேமரா வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் உடன் வருகிறது.
முன்புற கேமரா அமைப்பை பொருத்தவரை 13 மெகாபிக்சல் உடன் வருகிறது. இதன் மூலம் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். சாம்சங்கின் சொந்த ப்ராசஸர் ஆன எக்ஸினோஸ் 1380 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இது தினசரி உபயோகத்திற்கு எந்தவித தடையும் இன்றி இயங்கக் கூடியது. ரேம் அமைப்பை பொருத்தவரையில் இதில் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 128 ஜிபி வேரியன்ட் 8ஜிபி ரேம் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை 16499 முதல் டாப் மாடல் 22,999 வரை உள்ளது. எனவே வருகிற ஜூலை 12-ம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் தளத்தில் இந்த மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.