சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய கேலக்ஸி M36 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி M35 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஏஐ சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் கேலக்ஸி M36 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M36 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ் பிளஸ், எக்சைனோஸ் 1380 சிப்செட், மாலி G68 GPU, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கேலக்ஸி M36 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் ஜெமினி, சர்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ செலக்ட் போன்ற வசதிகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆறு ஆண்டுகள் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகின்றன. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 13MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டெப்த் மேப், நைட் போர்டிரெயிட், ஆப்ஜக்ட் இரேசர், இமேட் க்ளிப்பர் மற்றும் எடிட் சஜெஷன்ஸ் போன்ற ஏஐ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், சாம்சங் நாக்ஸ் வால்ட் மற்றும் வேப்பர் கூலிங் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி M36 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,499 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வங்கி சலுகையாக ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் கேலக்ஸி M36 ஸ்மார்ட்போன் செரின் கிரீன், வெல்வட் பிளாக் மற்றும் ஆரஞ்சு ஹேஸ் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 12-ம் தேதி அமேசான், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.