இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. சாம்சங் எக்சைனோஸ் 2400e பிராசஸர் கொண்டிருக்கும் கேலக்ஸி S24 FE அந்நிறுவனத்தின் கேலக்ஸி S24 மற்றும் கேலக்ஸி S25 சீரிசை சார்ந்த தோற்றம் கொண்டுள்ளது.
விலை குறைப்பு விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி S24 FE 5ஜி ஸ்மார்ட்போனின் விலை அமேசான் வலைதளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 34,999 விலையிலேயே கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1,250 வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். இது ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கிறது.
அம்சங்கள்:
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் 6.7 FHD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே, கேலக்ஸி ஏஐ சார்ந்த அம்சங்கள், 50MP பிரைமரி கேமரா, 12MP+8MP கேமரா, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஃபிளாக்ஷிப் தர அம்சங்களுடன் கிடைக்கும் கேலக்ஸி S24 FE 5ஜி மாடல் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தற்போதைய விலை குறைப்பு கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனை வாங்க கூடுதல் காரணமாக அமைந்துள்ளது. இந்திய சந்தையில் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் ரூ. 59,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.