சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் தர ஸ்மார்ட்போன் சீரிஸ் கேலக்ஸி S25 அல்ட்ரா. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த மாடலின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் அவ்வளவு எளிதில் சலுகைகளோ, தள்ளுபடியோ வழங்கப்படுவதில்லை.
மிகப்பெரிய விற்பனை திருவிழா அல்லது சிறப்பு சலுகைகளின் கீழ் இந்த மாடலுக்கு குறுகிய கால தள்ளுபடி அல்லது வங்கி சார்ந்த சலுகைகள் அவ்வப்போது வழங்கப்படுவதுண்டு. இந்த நிலையில், அமேசான் வலைதளத்தில் தற்போது கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த 30 நாட்களில் இத்தனை தள்ளுபடி வழங்காத அளவுக்கு தற்போது கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தற்போதைய சலுகையின் படி சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 12,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி காரணமாக கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 1,17,999 என மாறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 1,29,999 ஆகும்.
தள்ளுபடி மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது மாத தவணை முறையில் ரூ. 9,261 வரை சேமிக்க முடியும். இதுதவிர அமேசான் பே பேலன்ஸ்-இல் ரூ. 3,539 வரை கேஷ்பேக் தொகையாக பெறலாம். மேலும், பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 12,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S25 அல்ட்ரா 5ஜி மாடலில் டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர், 200MP பிரைமரி கேமரா, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1024 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கேலக்ஸி ஏஐ சார்ந்த விசேஷ அம்சங்களும் உள்ளது.