200MP கேமரா, 12GB ரேம் ஸ்மார்ட்போன்… விலையை ரூ. 12,000 குறைத்து மாஸ் காட்டிய சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை குறுகிய கால சலுகையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S25 சீரிஸில் இடம்பெற்று இருக்கும் அல்ட்ரா மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி என்ற பிரத்யேக சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமராவும் ஏராளமான கேலக்ஸி ஏஐ அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகைகள் சேர்க்கும் பட்சத்தில் ஸ்மார்ட்போனின் விலை மேலும் குறையும் வாய்ப்புகள் உண்டு.

சலுகை விவரங்கள்:

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ. 1,29,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கானது ஆகும். சாம்சங் இந்தியா ஸ்டோரில் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ. 12,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி குறுகிய காலத்திற்கு பயனர்கள் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை ரூ. 1,17,999 விலையிலேயே வாங்கிட முடியும்.

இந்த வேரியண்ட் மட்டுமின்றி 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடலின் விலையும் ரூ. 1,41,999-இல் இருந்து தற்போது ரூ. 1,29,999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 75,000 வரை தள்ளுபடி பெறலாம்.

இவைதவிர கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை மிக எளிய மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும். பயனர்கள் மாதம் ரூ. 9,833.24 எனும் மாத தவணையில் ஸ்மார்ட்போனினை வாங்கிடலாம். பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 உள்ளிட்டவைகளை சேர்த்து வாங்கும் போது ரூ. 18,000 வரையிலான பலன்களை பெற முடியும்.

Leave a Comment