உலக அளவில் பெரும்பாலான கேட்ஜெட் நிறுவனங்கள், விர்ச்சுவல் ரியாலிட்டு, ஆகுமெண்டட் ரியாலிட்டி மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டு எனப்படும் மூன்று தொழில்நுட்பங்களையும் இணைத்து செயல்படும் XR தொழில்நுட்பத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், சாம்சங் நிறுவனமும் தனது பயணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
Project Moohan
சாம்சங்கின் முதல் XR ஹெட் செட்டான Project Moohan உலக அளவில் இணைய வழியில் விர்ச்சுவலாக நடக்கும் நிகழ்வு மூலமாக அக்டோபர் 21-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு XR பிளாட்ஃபார்மில் இயங்கும் Project Moohan ஹெட்செட், ஏற்கனவே கடந்த ஜனவரியில் நடந்த கேலக்ஸி அன்பேக்கிங் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தயாரிப்புக்காக சாம்சங்கோடு, கூகுள் மற்றும் குவால்காம் போன்ற முன்னணி நிறுவனங்களும் கைகோர்த்திருக்கும் நிலையில், இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ஆப்பிளின் விஷன் ப்ரோவுக்கு இது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல, 3,499 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 3,10,489 ரூபாய்) என்ற டைனமிக் பிரைஸிங்கில் விற்கப்படும் ஆப்பிளுக்கு நேரடியாக சவால் விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங், இந்த செக்மெண்டில் குறைவான விலையில் இந்த XR ஹெட்செட்டை அறிமுகப்படுத்தினால், XR தொழில்நுட்ப வசதிகளை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகிறார்கள்.