இந்திய அரசு அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் Sanchar Saathi செயலியை இன்ஸ்டால் செய்ய உத்தரவு கொடுத்துள்ளது. இதனால் Android, iPhone என எந்த மொபைல் வாங்கினாலும், இந்த app ஏற்கனவே உள்ளபடி இருக்கும். இதுகுறித்து அரசு கூறும்போது இந்த செயலி திருடப்பட்ட போன்களை block செய்ய, போலி IMEI-களை கண்டுபிடிக்க, மோசடி அழைப்புகள் மற்றும் spam சம்பவங்களை கட்டுப்படுத்த உதவும் ஒரு பாதுகாப்பு கருவி.
ஆனால் இந்த முடிவு வெளியாகியவுடன் இணையத்தில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. காரணம் என்னவென்றால் Sanchar Saathi செயலிக்கு phoneல் மிக அதிகமான permissions தேவைப்படுகின்றன. அதாவது IMEI number, SIM விவரங்கள், call records போன்ற முக்கிய தகவல்களை அணுக வேண்டியிருக்கும். இதனால், “அரசு நேரடியாக நம்ம personal dataக்கு access கிடைக்கும்?” என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.
மேலும், சில தொழில்நுட்ப நிபுணர்கள் சொல்வதாவது, ஒரு appஐ பயனரின் அனுமதியில்லாமல் ப்ரீ-இன்ஸ்டால் செய்வது privacy முறைகளுக்கு எதிரானது. பயனருக்கு அந்த appஐ delete செய்யவும் முடியாமல் இருந்தால், அது மேலும் பிரச்சனையாக முடியும் என்று எச்சரிக்கிறார்கள்.
இதேவேளை, சிலர் இந்த முடிவு Apple மற்றும் Android நிறுவனங்களுடனும் பிரச்னையை உருவாக்கலாம் என்று கூறுகின்றனர். ஏனெனில் இரண்டு நிறுவனங்களும் security மற்றும் user-consent முறைகளை மிக கடுமையாக பின்பற்றுபவர்கள்.
அரசின் நோக்கம் மொபைல் மோசடிகள் மற்றும் phone theftஐ குறைப்பது என்றாலும், பயனர்கள் கேட்கும் கேள்வி ஒன்று தான். பாதுகாப்பு என்ற பெயரில் privacyஐ வேவு பார்ப்பதா? Sanchar Saathi உண்மையில் உதவுமா அல்லது இது தேவையில்லாத monitoring-க்கு வழி திறக்குமா? என்பது குறித்து தற்போது பெரும் விவாதம் இணையத்தளங்களில் நடந்துகொண்டிருக்கிறது.