இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி மாடல்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சந்தையில் நிலவும் கடும் போட்டி காரணமாக முன்னணி பிராண்டுகள் உள்பட ஒவ்வொரு நிறுவனமும் புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய டிவி மாடல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன.
புதிய டிவி மாடல்கள் அறிமுகமாகும் வேளையில், ஏற்கனவே அறிமுகம் செய்த டிவி-க்களின் விற்பனையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் டிவி பிராண்டுகளும், ஆன்லைன் விற்பனை தளங்களும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கின்றன. பொதுவாகவே ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு தள்ளுபடி, வங்கி சார்ந்த சலுகைகள், கேஷ்பேக் என பல்வேறு பலன்கள் வழங்கப்படுவது இயல்பு தான்.
சலுகை விவரம்:
இந்த நிலையில், அமேசான் இந்தியா வலைதளத்தில் சோனி நிறுவனத்தின் 55 இன்ச் 4K Ultra HD டிவி மாடலுக்கு யாரும் நம்ப முடியாத அளவுக்கு அசத்தலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ரூ. 99,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சோனி 139செ.மீ (55 இன்ச்) பிரேவியா 2M2 சீரிஸ் 4K Ultra HD ஸ்மார்ட் எல்இடி டிவி (K-55S25BM2 மாடல்) தற்போது ரூ. 68,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இது அந்த டிவி-யின் உண்மை விலையை விட ரூ. 30 ஆயிரத்து 910 குறைவு ஆகும். சோனி 4K Ultra HD எல்இடி டிவிக்கு அதிகப்படியான தள்ளுபடி அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி இந்த டிவியை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 வரை தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு மட்டும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி அமேசான் பே பேலன்ஸில் ரூ. 2068 வரை கேஷ்பேக், ஜிஎஸ்டி ரசீது இருக்கும் பட்சத்தில் 28 சதவீதம் வரை வர்த்தக முறையில் சேமிப்பு என பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது.
அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை சோனி 139செ.மீ (55 இன்ச்) பிரேவியா 2M2 சீரிஸ் 4K Ultra HD ஸ்மார்ட் எல்இடி டிவி (K-55S25BM2 மாடல்) 4K 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, கூகுள் டிவி, வாட்ச்-லிஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், கேம் மெனு, ALLM/eARC (HDMI 2.1), ஆப்பிள் கார்பிளே 2, ஆப்பிள் ஹோம்கிட் மற்றும் அலெக்சா போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை வைபை, யுஎஸ்பி, ஈத்தர்நெட், HDMI உள்ளது. இந்த டிவியில் 3840×2160 பிக்சல் ஸ்கிரீன், 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட், டிடிஎஸ்:எக்ஸ், டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ, 4K பிராசஸர் X1, HDR10 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.