latest news
இனி எல்லோர் காதிலும் தேன் பாயும்..ஆமாங்க..சோனி இயர்பட்ஸ் வந்துட்டுல..

தரமான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்றால் நாம் அனைவரும் முதலில் நினைப்பது சோனி என்கிற பெயர் தான். இன்று சோனி நிறுவனம் அதிரடி அறிமுகம் ஒன்றை இன்று செய்துள்ளது. WF-C700N Wireless earbuds இன்று சோனியால் அதிரடியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சோனி நிறுவனத்தின் மிகவும் மலிவுவிலை இயர்பட்ஸ் ஆகும்.

truly wireless in-ear headphones
WF-C500-ன் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பானதுதான் இந்த WF-C700N இயர்பட்ஸில், WF-C500-ஐ போலவே மிகசிறந்த ஆடியோ தரத்தை தரும். WF-C700N Wireless earbuds-ல் கூடுதல் சிறப்பம்சங்களாக Active Voice Cancellation மற்றும் Multipoint Connection-யும் கொண்டுள்ளது. ஆம்பியண்ட் சவுண்ட் மோடு-ம் இருப்பதால், நாம் ஒரே நேரத்தில் மற்றவர்களுடன் சிரமம் இல்லாமல் பேசிகொண்டே இசையை ரசிக்கலாம்.
இந்த இயர்பட்ஸ், நீங்கள் இருக்கும் இடத்திற்க்கு ஏற்றவாறு ஆடியோ செட்டிங்-கை தானாக மாற்றிக்கொள்ளும். நாம் அதிகமாக செல்லும் இடங்களாகிய அலுவலகம், ஜிம், வீடு ஆகியவற்றிற்கு ஏற்றவாறு Adaptive Sound Control எனும் அம்சமானது தானாக ஆடியோ மோடை மாற்றி கொள்ளும். சோனி நிறுவனமானது Wind Noise Reduction டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளதால் நாம் அதிகப்படியான காற்று உள்ள இடங்களில் கூட வாய்ஸ்களை மிகத்தெளிவாக கேட்க முடியும்.

having wind noise reduction technology
இதன் பேட்டரியானது 15 மணி நேரம் வரை தாங்க கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 10+10 மணி நேரம் Carrying Case சார்ஜினையும் பெற்றுள்ளது.இதன் ஆடியோ தரத்தினை மேம்படுத்துவதற்காக இதில் Digital Sound Enhancement Engine(DSEE) என்ற டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த இயர்பட்ஸின் IPX4 வாட்டர் ரெசிஸ்டெண்ட் தன்மையையும் பெற்றுள்ளது. இந்த பட்ஸினை ஜுலை 15 ஆம் தேதி முதன் அனைத்து சோனி செண்டர், சோனி எக்ஸ்க்லுசிவ் ஸ்டோர்கள், ShopatSC இணையதளம், முக்கிய எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர்களிலும் நமக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வண்ணம்:

available in three colours
இந்த இயர்பட்ஸானது நமக்கு வெள்ளை, கருப்பு, லாவண்டர், சேஜ் கிரின் போன்ற 4 வண்ணங்களில் கிடைக்கும். இந்த இயர்பட்ஸானது மேற்கூறிய வணிக நிறுவனங்கள் அனைத்திலும் ரூ.8,990க்கு கிடைக்கும்.
