4 OTT சந்தா முற்றிலும் இலவசம்… டாடா அறிவித்த சூப்பர் ஆஃபர்..!

இந்தியாவில் ஓடிடி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. எனினும், ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது பயனர் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த டெலிகாம் மற்றும் பிராட்பேணட் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன.

டாடா குழுமம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கும் பிராண்டு தான் டாடா பிளே ஃபைபர். இந்திய சந்தையில் இந்த பிராண்டு 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கி வருகிறது. மேலும், இந்த ரீசார்ஜ் திட்டங்களுடன் பயனர்களுக்கு ஓடிடி சேவையை பயன்படுத்துவதற்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் பிராட்பேண்ட் திட்டம் தேவைப்படுவோருக்கு டாடா பிளே சூப்பர் சலுகையை வழங்கி வருகிறது.

அதன்படி டாடா பிளே ரூ. 900 விலையில் கிடைக்கும் 100 Mbps பிராட்பேண்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு நான்கு ஓடிடி சேவைகளை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. இது டாடா பிளே பிராண்டின் என்ட்ரி லெவல் ரீசார்ஜ் ஆகும். இதுதவிர டாடா பிளே ரூ. 950 மற்றும் ரூ. 1100 விலையில் கிடைக்கின்றன. பயனர்கள் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் செய்யும் போது ரீசார்ஜ் கட்டணம் குறையும்.

டாடா பிளே ஃபைபர் 100 Mbps ரீசார்ஜ் பலன்கள்:

டாடா பிளே பிராட்பேண்ட் சைவயில் ரூ. 900 மாதாந்திர ரீசார்ஜ் தேர்வு செய்வோருக்கு ஏராளமான பலன்களை வழங்குகிறது. இதில் நான்கு ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஓடிடி பலன்கள் சேர்த்து வழங்கப்படுவதால், இது சிறந்த ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது- ஜியோஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி+, லயன்ஸ்கேட்-பிளே, ஜீ5, சன்நெக்ஸ்ட், ஆஹா, ஃபேன்கோட், டிஸ்கவரி+, EPICON, ஷீமாரூமீ, ஹங்காமாஓடிடி, சௌபல், ஸ்டேஜ், நம்மஃப்ளிக்ஸ், மனோரமா மேக்ஸ், ரீல்டிராமா, பிடிசி, ஐஸ்டிரீம், டிஸ்ட்ரோடிவி மற்றும் பிபிசி பிளேயர் உள்ளிட்ட தளங்களில் பயனர் விரும்பும் நான்கு தளங்களை தேர்வு செய்து கொள்ளளாம்.

இத்துடன் அனிமேக்ஸ், டிராவல்எக்ஸ்பி, ஹால்மார்க், பிளேஃப்ளிக்ஸ், ஷார்ட்ஸ்டிவி, டாக்குபே, கியூரியாசிட்டிஸ்டிரீம், விஆர் மற்றும் ஃபியூஸ் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 200 சேனல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச வைபை ரவுட்டர் வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு 3.3டிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இதன்பிறகு டேட்டா வேகம் 3 Mbps ஆக குறைக்கப்பட்டு விடும்.

மாதாந்திர திட்டத்தை தேர்வு செய்யும் போது பயனர்கள் ரூ. 500 கட்டமைப்பு கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். ஒரு மாத திட்டம் அல்லது 50 Mbps திட்டத்தை தேர்வு செய்யும் போது ரூ. 1000 முன்பணம் செலுத்த வேண்டும்.

Leave a Comment