போட்டிக்கு நாங்களும் வரலாமா.. அதிர வைக்கும் அம்சங்களுடன் புதிய Tcl டேப்லெட்..

டிசிஎல் நிறுவனத்தைப் பொறுத்தவரை டெலிவிஷன் துறையில் நீண்ட காலமாக கோலோற்றி வருகிறது. இந்த நிறுவனம் தொலைக்காட்சி பெட்டியின் திரை இக்கு பெயர் பெற்றது இதன் இன்று பல நிறுவனங்களுக்கு டிசிஎல் தான் டிஸ்ப்ளே சப்ளை செய்கிறது.

அந்த வகையில் தற்போது டிசிஎல் நிறுவனம் டேப்லட் விற்பனையில் கிளம்பி இறங்கி உள்ளது. அமெரிக்காவில் டிசிஎல் என்எக்ஸ்டி பேப்பர் 11 பிளஸ் (TCL NXTpaper 11 Plus) என்ற மாடலில் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.‌

டிசிஎல் என்எக்ஸ்டி பேப்பர் 11 பிளஸ் சிறப்பம்சங்கள் :

இதில் 11.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 2.2hz resolution உடன் 120 hz ரெப்ரஸ் ரேட்டுடன் 120hz டச் சாம்பிளிங் ரேட் என இதன் டிஸ்ப்ளே அமைப்பு உள்ளது. பிராசஸரை பொருத்தவரை மீடியா டெக் ஹிலியோ ஜி 100 பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டோகோர் சிபியு ஆதரவும் இதில் உள்ளது.

எனவே அனைத்து செயலிகளையும் இயக்குவது வீடியோக்களை பார்ப்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஸ்மூத்தாக செயல்படும். 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் உள்ளது.

டிடிஎஸ் சவுண்ட் கொண்ட நான்கு ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது. இதனால் சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற முடியும். பின்புற கேமரா அமைப்பை பொறுத்தவரை 8எம்பி கொண்டு வருகிறது. மேலும் ஒரு எல்இடி பிளாஷ் உடன் இருக்கிறது. மற்றும் முன்புற செல்பி கேமராவை பொறுத்தவரை 8 மெகாபிக்சல் உள்ளது.அதேபோல இந்த டேப்லட் மூலம் 1080 பிக்சல் குவாலிட்டியில் வீடியோ பதிவு செய்ய முடியும்.
பேட்டரி அமைப்பை பொறுத்தவரை 8000mah என்ற அளவில் வருகிறது. இன்றைய காலகட்டங்களில் மொபைல் ஃபோன்களில் 7500 mah பேட்டரி கொடுக்கிறார்கள். டேப்லெட் செக்மெண்டில் இது மிகச் சிறிய பேட்டரி போல் தெரிகிறது. இதனை சார்ஜ் செய்ய 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வருகிறது.

இதில் வைஃபை,ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களும் இந்த டிசிஎல் என்எக்ஸ்டி பேப்பர் 11 பிளஸ் மாடலில் இடம்பெற்றுள்ளது. இதன் எடை பொருத்தவரை 490 கிராம் மட்டுமே. இதன் விலை பொறுத்தவரை இந்திய மதிப்பில் 21,000 பட்ஜெட்டில் அமெரிக்காவில் விற்கப்படுகிறது. விரைவில் இந்த டிசிஎல் என்எக்ஸ்டி பேப்பர் 11 பிளஸ் மாடல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment