பட்ஜெட்டில் பட்டைய கிளப்பும் டெக்னோ.. pova curve 5ஜி மொபைல் அறிமுகம்..

சைனீஸ் மொபைல் நிறுவனமான டெக்னோ பட்ஜெட் சீரியஸில் புதிய ரக மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் கர்வ் சீரியஸில் மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் மற்றும் உயர்தர டிசைன் கொண்டு மூன்று கலர்களிலும் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் வந்துள்ளது.

6.7 இன்ச் அமோல்ட் கர்வ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 144 ஹெச் ரெஃப்ரெஷ்ரேடுடன் வருகிறது. இதனுடன் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 7300 அல்டிமேட் பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 8gb வகையான ரேம் 128gb வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் பின்புறத்தில் 64 மெகா பிக்சல் கொண்ட சோனி ஐ எம் எக்ஸ் 682 சென்சார் கொண்ட கேமராவும் 2 மெகாபிக்சல் செகண்டரி கேமராவும் கொண்டு டூயல் கேமராவாக உள்ளது. முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Tecno Pova Curve 5G
Tecno Pova Curve 5G

ப்ளூடூத் 5.4 nfc மற்றும் wifi-6 டால்பி அட்மாஸ் சப்போர்ட் ip 64 ரேட்டிங் மற்றும் ai ஆட்டோ கால் ஆன்ஸர் மற்றும் ai கால் அசிஸ்டன்ட் போன்ற ai தொழில் நுட்பமும் உள்ளடக்கி உள்ளது.

இதன் பேட்டரி 5500mah பேட்டரியை கொண்டுள்ளது இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 45 நிமிடங்களில் 45w சார்ஜிங் கொண்டு முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது.

இதன் விலை 6 ரேம் ஜிபி + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் பிலாய் 159 99 மற்றும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 16999 விலைகளில் கிடைக்கப்பெறுகிறது.

Leave a Comment