டைமண்ட் சிட்டி7400.. 50mp கேமரா.. 6000mah பேட்டரி.. அதிரடி அம்சங்களுடன் வரப்போவது புதிய ஐகூ.. என்ன மாடல் ? என்ன விலை?

பட்ஜெட் விலையில் தரமான மொபைல்களை வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்று முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளித்து வருகிறது ஐகூ. அந்த வகையில் தற்போது பட்ஜெட் விலையில் ஐகூ இசட் சீரிஸ் வரிசையில் புதிய மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுவரை வெளிவந்த இசட் சீரியஸ் மாடல்கள் பட்ஜெட் விலையில் சிறந்த சிறப்பம்சங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த வகையில் தற்போது ஐகூ இசட் 10 ஆர் (iqoo z10r) மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் வடிவமைப்பை பொறுத்தவரை விவோ வி50 போன்று தான் காணப்படுகிறது. ஏற்கனவே விற்பனையில் ஐகூ இசட் 10 (iqoo z10), ஐகூ இசட் 10 எக்ஸ் (iqoo z10x), ஐகூ இசட்10 லைட் (iqoo z10 lite) போன்ற மாடல்கள் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஐகூ இசட் 10 ஆர் (iqoo z10r ) மாடலும் புதிதாக இணைய உள்ளது.

iqoo z10r சிறப்பம்சங்கள் :
இந்த மாடலின் சிறப்பம்சங்கள் எதுவும் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை இணையத்தில் பரவும் லீக்ஸ் அடிப்படையில் இந்த தகவல்கள் பெறப்பட்டது. இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் அமலோட் டிஸ்ப்ளே 120hz ரெஃப்ரஸ் ரேட்டு உடன் வருகிறது. மேலும் இது பெரிய கர்வ் வடிவமைப்பில் வருவதால் மல்டிமீடியா பயன்படுத்தும் போது சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிராசசர் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 7400 எஸ் ஓ சி. இது தினசரி உபகரத்திற்கும், கேமிங், மல்டிமீடியா யூசேஜ் போன்றவை பயன்படுத்தும் போது எந்தவித தடையும் இன்றி ஸ்மூத்தாக இயங்கக் கூடியதாக இருக்கும்.

மல்டிடாஸ்கிங் போது ஒரே நேரத்தில் 30 செயலிகளை பயன்படுத்தலாம். அதுவும் எந்த ஒரு இடையூறும் இன்றி என ஐகூ கூறுகிறது. மேலும் இதில் 12 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வருகிறது. கேமரா அமைப்பை பொறுத்தவரை இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் வருகிறது. முன்புற செல்பி கேமராவை பொறுத்தவரை இதில் 32 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீடியோகால் மற்றும் செல்ஃபி புகைப்படங்கள் மிகவும் துல்லியமானதாக இருக்கும். மேலும் இதில் வைஃபை 6, டைப் சி போர்ட், ப்ளூடூத் என்எப்சி, 5ஜி, 4ஜி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இருக்கிறது. பேட்டரியை பொருத்தவரை 6000mah கொண்ட பேட்டரி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மொபைலைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐகூ கூடிய விரைவில் வெளியிடும் மற்றும் இதன் விலையைப் பொறுத்தவரை இந்தியாவில் 20,000 பட்ஜெட் கீழ் கொண்டுவர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment