10,200 mah பேட்டரி.. ஸ்னாப்டிராகன் 8 ஜென் பிராசசர்.. கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வெளியானது lenovo டேப்.. என்ன விலை ?

லெனோவா நிறுவனம் இந்தியாவில் கவர்ச்சிகரமான பல புதிய அம்சங்களுடன் புதிய டேப்லெட் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஏஐ அம்சங்களுடன் லெனோவா யோகா டேப் பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லெனோவா யோகா டேப் பிளஸ் சிறப்பம்சங்கள் :
இதில் 12.7 இன்ச் 3கே ரெசல்யூஷன் கொண்ட 144 ஹெட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டுடன் 900 மினிட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் பெரிய டிஸ்ப்ளே வருகிறது. இதனால் கேம் மற்றும் மல்டிமீடியா அனுபவம் சிறப்பானதாக இருக்கும். மேலும் டிஸ்ப்ளே பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடக்ஷன் உடன் வருகிறது. இதில் டியுவி சர்டிபிகேட் உடன் வருவதால் ப்ளூ லைட் மற்றும் ஹை விசிபிலிட்டியில் இருந்து பாதுகாக்கிறது.

இந்த டேப்லெட்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 என்கிற பிராஸசர் வருகிறது. இது ஒரு மிட் ரேன்ஜ் பிளக்ஷிப் பிராசசர் என்று சொல்லலாம். அனைத்து வித டாஸ்கிற்கும் ஆல் ரவுண்டர் பர்ஃபார்மன்ஸ் வழங்கக் கூடியதாக இந்த பிராசசர் இருக்கும். மல்டிமீடியா பயன்படுத்தும் போது சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற ஹார்மன் கார்டூன் கொண்ட ஆறு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மோஸ் உடன் கிடைக்கிறது.

மேலும் இந்த டேப்லெட்டில் tab pen கொடுக்கப்பட்டுள்ளது. டிசைன் சார்ந்த வேலைகளுக்கு இந்த pen உதவியாக இருக்கும். மேலும் இதன் இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகிறது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரின் உடன் வருகிறது. lpddr5x ரேம் டைப் இருக்கிறது. இதனால் இதனுடைய ரீட் ரைட் வேகம் அதிகமாக இருக்கும்.

மேலும் விபஸ் யுஎப்எஸ் 4.0 இடம்பெற்றுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஏஐ அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. கேமரா அமைப்பை பொறுத்தவரை இதில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி கேமராவும், 13 மெகாபிக்சல் முன்புற செல்பி மற்றும் வீடியோக்கள் உடன் வருகிறது. இந்த டேப்லெட்டில் wi-fi 7, ப்ளூடூத் 5.0,usb-c போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.

விலைப் பொருத்தவரை 50,000 பட்ஜெட்டில் பிளாக்ஷிப் ரேஞ்சில் லெனோவா யோகா டேப் பிளஸ் விற்கப்படுகிறது.

Leave a Comment