போட்டான்மேட்ரிக்ஸ் நிறுவனம் கிரவுட்ஃபண்டிங் தளமான இன்டிகோகோவில் தனது போர்டபில் லேசர் சாதனத்திற்கு நிதி திரட்டி வருகிறது. தற்போது இந்த சாதனத்தின் விலை 498 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கை-ஃபை டரெட் போன்று காட்சியளிக்கும் இந்த சாதனம் LIDAR மற்றும் லேசர் தொழில்நுட்ப உதவியோடு இயங்குகிறது. இந்த சாதனம் காற்றில் பறந்து வரும் கொசுக்களை காற்றோடு வைத்தே கொன்று குவிக்கும்.
முற்றிலும் இருள் சூழ்ந்த இடங்களில் கூட இந்த சாதனம் ஒரு நொடிக்கு அதிகபட்சம் 30 கொசுக்களை கொன்று குவிக்கும் என்று போட்டான்மேட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது. ஜிம் வொங் என்பவர் உருவாக்கி இருக்கும் இந்த சாதனம் அதிக துல்லியமான LIDAR மற்றும் கல்வனோமீட்டர் கொண்டு இயக்கப்படும் லேசர் ஆகியவற்றை பயன்படுத்தி இயங்குகிறது.
இந்த சாதனம் மனிதர்கள், செல்லப்பிரானிகள் மற்றும் பறவைகளை கொண்டு அளவில் மிகச்சிறிய கொசுக்களை அடையாளம் காண்கிறது. இதில் உள்ள லேசர் தொழில்நுட்பம் சத்தமின்றி இயங்குகிறது. இது முழுக்க முழுக்க Infrared மற்றும் லேசர் டார்கெட்டிங் மூலம் இயங்குகிறது. இதனால் காற்றில் பறந்துவரும் கொசுக்கள் நொடிகளுக்குள் கொன்றுகுவிக்கப்பட்டு விடும்.
போட்டான்மேட்ரிக்ஸ் நிறுவனம் இந்த சாதனத்தின் ஸ்டான்டர்டு வெர்ஷன் 3 மீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடல்கள் அதிகபட்சம் 6 மீட்டர்கள் வரை அதிக ரேஞ்ச் வழங்குகின்றன. இரு வெர்ஷன்களும் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளன. இந்த சாதனம் தொடர்ச்சியாக 16 மணி நேரங்கள் வரை இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.
இந்த சாதனம் வாங்குவோருக்கு கோர் லேசர் யூனிட், பவர் பேங்க், 2 மீட்டர் டிசி கேபிள் மற்றும் மவுன்ட் செய்யக்கூடிய பேஸ் ஆகியவை வழங்கப்படும். இத்துடன் ஆப்ஷனல் அக்சஸரீக்கள் பட்டியலில் சுழலக்கூடிய பிளாட்பார்ம் மற்றும் ஸ்மார்ட்போன் பவர் பேங்க் உடன் இணைந்து இயங்கும் டாங்கிள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த சாதனத்தின் பெருவாரியான உற்பத்தி இதுவரை துவங்கவில்லை. எனினும், அதிகப்படியான வாடிக்கையாளர்கள் கிடைக்க பெற்றதும் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும்.