இந்திய மக்களிடையே தொலைக்காட்சியின் பயன்பாடு தவிர்க்க முடியாது. இதன் பயன்பாடு வீட்டுக்கு வீடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தாம்சன் நிறுவனம் எனிய மக்களும் வாங்கக்கூடிய பட்ஜெட் விலையில் 43 இன்ச் 4k qled டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
தாம்சன் 43 இன்ச் ஃபினிக்ஸ் 4k qled சிறப்பம்சங்கள் :
இந்த 43 இன்ச் QLED டிவி hdr 10 சப்போர்ட் மற்றும் 1 பில்லியன் கலர்ஸ் 4k resolution உடன் வருகிறது. Ai pq என்ற சிப்செட் உடன் வருகிறது. மேலும் ஏ 55 * 4 என்ற பிராசஸருடன் இந்த டிவி வருகிறது. இதனால் செயலிகளை எந்த இடையூறும் இல்லாமல் மிகவும் ஸ்மூத்தாக இயக்க முடியும். ஒலி அமைப்பை பொறுத்தவரை இன்று அனைத்து டிவி மாடலிலும் இருப்பதைப் போல டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது.
இந்த டிவியில் பல வகையான சவுண்ட் மோட்கள் இருப்பதால் இதைக் கேட்பவர்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்கிறது. மேலும் இது google டிவி ஒ எஸ் உடன் இயங்குகிறது. இதில் குகுல் ப்ளே ஸ்டோர் வாய்ஸ் அசிஸ்டன்ட்,youtube,netflix,amazon prime, jio hotstar போன்ற பல வகையான ஓ டி டி ஆப்புகளை இதில் காண முடியும்.
மேலும் தேவையான ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். இதில் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஏர் பிளே சப்போர்ட் எச் டி எம் ஐ போர்ட் usb போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் உள்ளது . மேலும் இதில் 2ஜிபி ரேம் 16 ஜிபி மெமரி வசதியும் உள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் ரிமோட் கண்ட்ரோலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் இருப்பதால் வாய்ஸ் மூலம் ஓடிடுதளங்களில் ஷார்ட்கட் பட்டன்களை கண்ட்ரோல் செய்ய முடியும்.
flipkart இணையதளத்தில் இந்த டிவியின் விலை 20,500 ரூபாயாக இருக்கிறது. மேலும் bank ஆஃபர்களை பயன்படுத்தி இன்னும் குறைவான விலைக்கு இந்த டிவியை வாங்கலாம்.