டிரம்ப் மொபைல் T1… ஸ்மார்ட்போன் வியாபரத்தில் அமெரிக்க அதிபர் குடும்பம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குடும்ப வியாபாரங்களின் கீழ் புதிதாக செல்லுலார் சேவை மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிதாக இணைந்துள்ளன. செல்லுலார் சேவையுடன் தொடங்கப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் முதல் சாதனமாக டிரம்ப் மொபைல் T1 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ஜொலிக்கும் புதிய ஸ்மார்ட்போன் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிரம்ப் மொபைல் T1 மாடல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6.8 இன்ச் AMOLED ஸ்கிரீன், 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிறுவனத்தின் சொந்த ஸ்மார்ட்போன் பிரான்டாக டிரம்ப் மொபைல் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் “The 47 Plan” என்ற பெயரில் ஒற்றை திட்டத்தை மட்டுமே வழங்குகிறது.

டிரம்ப் மொபைல் T1 அம்சங்கள்:

சிறப்பம்சங்களை பொருத்தவரை டிரம்ப் மொபைலி T1 மாடலில் பன்ச் ஹோல் டிசைனில் 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 12 ஜிபி ரேம், 256 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் கைரேகை சென்சார், ஏஐ சார்ந்து இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, இரண்டு 2MP சென்சார்கள் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளது. 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் டிரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போன் 20 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்ரோன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டுள்ளது.

தி பிளான் 47 பலன்கள்:

டிரம்ப் மொபைல் வழங்கும் தி 47 பிளான் திட்டத்தில் அன்லிமிட்டெட் டாக்-டைம், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது. இதன் விலை 47.45 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 5ஜி நெட்வொர்க் அதிகபட்சம் 20 ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

இத்துடன் தி 47 பிளான் திட்டத்தில் அதிகபட்சம் 100 நாடுகளுக்கு இலவச சர்வதேச அழைப்புகள் வழங்கப்படுகிறது. ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இலவச சர்வதேச டெக்ஸ்டிங் மற்றும் சர்வதேச அழைப்புகளில் சிறப்பு தள்ளுபடி போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

Leave a Comment