Gmail பயன்படுத்தும் பலருக்கு email எழுதுவது ஒரு headache. சரியான words, grammar, tone என சரியாக set பண்ண வேண்டிய situation அது. இதுக்கு solutionஆ Google அவங்க Gmailல் ‘Help Me Write’ என்ற புதிய AI featureஐ கொண்டு வந்துள்ளது.
இந்த featureஐ, email எழுதுறதை simpleஆக்க fastஆவும் மாற்ற உதவும் என்று கூறப்படுகிறது. இந்த feature மூலம், users emailல் என்ன சொல்லணும்னு மட்டும் shortஆ type பண்ணினால் போதும். அதன்படி Gmail AI ஒரு full emailஐ draft செஞ்சி தானாக உருவாக்கி தந்துடும்.
ஆபிஸுக்கான இமெயில், லீவ் மெயில்கள், அப்பாயின்மெண்ட், வேலைக்கான மெயில் என எல்லாத்துக்குமே ரொம்ப useful. இந்த featureஐ use பண்ண, Gmailல் new mail ஸ்டார்ட் பண்ணும்போது message boxல் ‘Help Me Write’ option வரும். அதைக் கிளிக் பண்ணி, என்ன மெயில் என்பதையும் எப்படி வேணும் என்பதை குறிப்பிட்டால் போதும்.
Userக்கு தேவைப்பட்டால் அந்த draftஐ edit பண்ணலாம் அல்லது directஆ send பண்ணிக்கலாம். இந்த AI tool grammarஐ மட்டும் சரி பண்ணுவது இல்லை. Email toneஐ மாற்ற முடியும்.