இருங்க பாய்.. 50mp சோனி கேமரா.. மீடியா டெக் 9300.. அல்ட்ரா லெவலில் களமிறங்கும் vivo

விவோ நிறுவனம் ஆன்லைன் விற்பனைக்காக T சீரியஸில் மொபைல்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ டி 4 அல்ட்ரா மொபைலை வருகிற 11-ம் தேதி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

இதன் சிறப்பம்சங்கள் :
6. 6 7 அகலம் கொண்ட பெரிய ஆமோலெட் டிஸ்ப்ளே வசதியுடன் வருகிறது. இது 120 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. பின்புற கேமரா அமைப்பு 50mp சோனி சென்சார் கொண்டு வருகிறது. மேலும் 50mp பெரிஸ்கோப் டெலி போட்டோ கேமரா உள்ளது. இதன் மூலம் துல்லியமான படங்களை எடுத்துக்கொள்ள முடியும்.

vivo t4 ultra
vivo t4 ultra

மேலும் 10x அளவு ஜூம் செய்து புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் முன்புற கேமராவும் 50mp கேமராவுடன் வருகிறது. வழக்கம்போல அனைத்து மொபைல்களிலும் கொடுக்கப்படும் அதே இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் இதிலும் வழங்கப்பட உள்ளது.

vivo t4 ultra
vivo t4 ultra

இந்த டி 4 அல்ட்ரா வில் புதிய பன்டச் ஓஎஸ் 15 கொண்டு ஆண்ட்ராய்டு 15 ஓ எஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். மேலும் மூன்று வருடம் மென்பொருள் மற்றும் பாதுகாப்புக்கான அப்டேட்டுகள் கிடைக்கும். சக்தி வாய்ந்த மீடியா டெக் டைமண்ட் சிட்டி 9300 பிராசசர் வசதியுடன் அறிமுக உள்ளது. இதனால் மிகவும் வேகமாக நீங்கள் கேம் விளையாடலாம்,எடிட்டிங் செய்யலாம் எந்தவித தடையும் இன்றி இந்த மொபைலை பயன்படுத்தலாம்.

vivo t4 ultra
vivo t4 ultra

மேலும் இரண்டு பக்கமும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உடன் டால்பி அட்மாஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. மேலும் ip64 டஸ்ட், அண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் இந்த மொபைல் வெளிவரும். மேலும் கவனிக்கக்கூடிய விஷயமாக 6000 mah வசதி கூடிய பெரிய பேட்டரி வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை சார்ஜ் போட வேண்டும் என்று. ஒரு நாள் முழுவதும் இந்த பேட்டரி பேக்கப் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்வதற்கு 91 w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆன்லைன் விற்பனை விலை 35,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு கீழே போட்டியாளர்களுக்கு பயம் அளிக்கும் வகையில் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.

Leave a Comment