6000mAh பேட்டரி, சூப்பர் ஃபாஸ்ட் 5G… ரூ.‌10,000-க்குள் அறிமுகமாகும் விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் தான் விவோ நிறுவனம் தனது T4 அல்ட்ரா 5ஜி ஸ்மரா்ட்போனினை அறிமுகம் செய்த நிலையில், தற்போது சற்றே குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட விவோ திட்டமிட்டு வருகிறது.

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடல் விவோ T4 லைட் 5ஜி என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது என்ட்ரி லெவல் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்றும் இதன் விலை 120 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 10,330 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக எக்ஸ்பெர்ட்பிக் வெளியிட்டுள்ள தகவல்களில் விவோ நிறுவனம் தனது T4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல் இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் புது விவோ ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

முன்னதாக இந்த மாடல் ப்ளூடூத் எஸ்ஐஜி செர்டிபிகேஷனில் இடம்பெற்று இருந்தது. இது ஸ்மார்ட்போன் வெளியீட்டை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி இருப்பதோடு, இது விரைவில் நடைபெறும் என்பதையும் உணர்த்தியுள்ளது. இந்த மாடல் 6000mAh பேட்டரியுடன் விவோ நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பேட்டரி தவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் மிகமெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் விவோ T3 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

இந்தியாவில் இந்த மாடலின் விலை ரூ. 10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் விவோ T4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையும் ரூ. 10,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் இது சந்தையில் இந்த பிரிவு மாடல்களில் சிறப்பான மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment