விவோ நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவோ டி4 லைட்ட 5g (Vivo t4 lite 5g) மாடலை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் சிறந்த மொபைல்களை விற்பனை செய்து வரும் விவோ, தற்பொழுது இந்த டி4 லைட் இதற்கு முன் வெளியான டி3 லைட்டை விட மிகச் சிறப்பான அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே 10,000 பட்ஜெட்டில் அறிமுகமான இந்த மொபைல் தற்போது இன்னும் 500 ரூபாய் குறைவாக ஆபர் விலையில் கிடைக்கிறது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 9999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது ஆஃபர் விலையில் 9499 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

விவோ டி4 லைட் 5ஜி சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 120 ஹெட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 6,300 என்ற ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4gb,6gb,8gb ram வேரியண்டில் கிடைக்கிறது. கேமராவை பொருத்தவரை 50 எம்பி சோனி சென்சார் உடன் வருகிறது. 2 எம்பி டெத்ப் சென்சார் உடன் வருகிறது. 5எம்பி செல்பி ஷூட்டருடன் வருகிறது.
இந்த விவோ டி4 லைட் 5ஜி மொபைல் பன்டச் ஓஎஸ் 15 மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் இயங்குகிறது. மேலும் இதில் புதிய யூ ஐ பியூச்சர்களும் இடம்பெற்றுள்ளது. பேட்டரிய பொருத்தவரை 6000mah என்ற பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 15w சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் உறுதியான பாடி அமைப்பைப் பொருத்தவரை மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கீழே விழுந்தாலும் பெரிதாக மொபைலுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு குறைவு. மேலும் இதில் 3.5mm ஆடியோ ஜாக், சிங்கிள் ஸ்பீக்கர் மற்றும் சைடு பிங்கர் பிரிண்ட் சென்சார் வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.