16GB ரேம், 1TB மெமரி, 6000mAh பேட்டரி… மிரட்டல் அம்சங்களுடன் விவோ எக்ஸ் போல்டு 5 அறிமுகம்..!

விவோ நிறுவனம் தனது எக்ஸ் போல்டு 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 8.03 இன்ச் 2K+ 120Hz LTPO ஸ்கிரீன், 6.53 இன்ச் FHD+ 120Hz LTPO பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்கிரீன்களும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன. புதிய எக்ஸ் போல்டு 5 மாடலில் புதுமையான ஹிஞ்ச் ஆன்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மொபைல் சிக்னல் சீராக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விவோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றியுள்ளன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் IPX8, IPX9 மற்றும் IPX9+ வாட்டர் ப்ரூப் அளவுகளை தாங்கும் ஒரே மடிக்கக்கூடிய ஸ்கிரீன் விவோ எக்ஸ் போல்டு 5 மாடலில் தான் உள்ளது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP 3x டெலிபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் 20MP செல்பி கேமரா வழங்கப்பகட்டு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சாதனத்துடன் இணைந்து இயங்கும் முதல் ஆண்ட்ராய்டு போன் மாடலாக விவோ எக்ஸ் போல்டு 5 இருக்கிறது. மேலும், இது ஏர்பாட்ஸ் உடனும் சீராக இயங்கும்.

சந்தையில் நான்காம் தலைமுறை சிலிகான் நெகடிவ் எலெக்டிரோடு தொழில்நுட்பம் கொண்ட முதல் 6000mAh புளூ ஓஷன் பேட்டரி விவோ எக்ஸ் போல்டு 5 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 80 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓரிஜின் ஓஎஸ் 5 கொண்டுள்ளது.

இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கிரீன் பைன், வைட் மற்றும் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 6999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 85,045 என துவங்குகிறது.

Leave a Comment