விவோ நிறுவனத்தின் மொபைல்கள் என்றாலே அதன் ப்ரீமியம் மொபைல் ஃபோன்களுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு ஏனெனில் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கேமரா மிகவும் தெளிவாக படம் பிடிக்கக் கூடியது. அந்த வகையில் விவோவின் x200fe மொபைல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மொபைலை பற்றிய தற்போது லீக்ஸ் வெளிவந்துள்ளது அதன்படி இந்த மொபைலில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இதில் 6.3 இன்ச் அளவுள்ள 120 ஹெச் எல்டிபி ஓ எல் இ டி (OLED) டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டிஸ்ப்ளே கலர் கான்ட்ராஸ்ட் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும். இதில் சக்தி வாய்ந்த மீடியா டெக் டைமன்சிட்டி 93000பிளஸ் என்ற ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பெர்பாமென்ஸ்,கேமிங்,மல்டிடாஸ்கிங் என அனைத்து விதமான செயல்களுக்கும் எந்த தோய்வும் இல்லாமல் வேகமாக மொபைலை இயங்க வைக்கும். இதில் 12 ஜிபி ரேம் +512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்டு வருகிறது.

கேமரா :
பின்புறம் ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வருகிறது. சோனி சென்ஸாரின் சோனி ஐ எம் எக்ஸ் 921 என்ற சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் கேமரா வருகிறது. 50 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் உடன் வருகிறது. எட்டு மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவுடன் வருகிறது. இது zeiss லென்ஸ் கொண்டு வருவதால் புகைப்படம் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் முன்புற கேமரா அமைப்பு 50மெகாபிக்சல் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பேட்டரி அமைப்பை பொறுத்தவரை 6500mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு 90w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதனால் 0 – 100 விரைவாக நாம் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இந்த மொபைலில் அசத்தலான பல சிறப்பம்சங்கள் இருப்பதால் கண்டிப்பாக இது ரசிர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று விருப்பாக்கலாம். மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்கள் மொபைல் வெளியாகும் அன்று முறையாக அறிவிக்கப்படும்.