விவோ நிறுவனம் தனது முற்றிலும் புதிய X200 ஸ்மார்ட்போன் மாடல் மலேசியா தொடங்கி பல்வேறு சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படட்து. முதற்கட்டமாக இந்த மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மலேசியா தொடங்கி இதர உலக நாடுகளில் அறிமுகம் செய்ய தொடங்கி இருக்கிறது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் விவோ S30 ப்ரோ மினி என் அழைக்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.31 இன்ச் 1.5K 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட LTPO AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 9300+ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இத்துடன் புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 50MP 3x டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கேமரா சென்சார்கள் செய்ஸ் ஆப்டிக்ஸ் வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம், IP68+IP69 ரேட்டிங், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட வசதி, 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள விவோ X200 FE ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டுள்ளது.
இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இஷ வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் விவோ X200 FE ஸ்மார்ட்போன் பிளாக் லூக்ஸ், எல்லோ க்ளோ, பின்க் வைப் மற்றும் புளூ பிரீஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 64,805 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று விவோ ஏற்கனவே அறிவித்து விட்டது.