விவோ நிறுவனம் கடந்த ஆண்டு தனது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. விவோ Y300 5ஜி என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் அதன் விலை மற்றும் அம்சங்கள் அடிப்படையில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
சில்வர், கிரீன் மற்றும் பர்பில் என மூன்று நிறங்களில் கிடைக்கும் விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது.
சலுகை விவரங்கள்:
இந்திய சந்தையில் விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை தற்போது ரூ. 19,499 ஆகும். இத்துடன் அமேசான் வலைதளத்தில் கூப்பன் வடிவில் ரூ. 200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், வங்கி சார்ந்த தள்ளுபடிகள், கேஷ்பேக் சலுகைகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 21,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு தான் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டது.
அம்சங்கள்:
சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 2MP பொக்கெ கேமரா சென்சார், 32MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. அன்றாட பயன்பாட்டிற்கு மிகக் குறைந்த அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு இந்த மாடல் சிறப்பானதாக இருக்கும்.