6500mAh பேட்டரி, 50MP கேமரா… மலிவு விலையில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவித அம்சங்கள் நிறைந்த மாடல்களை அறிமுகம் செய்வதில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக விவோ விளங்குகிறது. உலகம் முழுக்க ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் விவோ நிறுவனம் சில மாடல்களை முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக பின்பற்றி வருகிறது.

அந்த வரிசையில், விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y300c ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசசதி கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP பிளர் கேமரா, முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 8MP சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை விவோ Y300c ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், பெய்டோ, ஓடிஜி, வைபை மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ள புதிய விவோ ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் வசதியும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 5 கொண்டுள்ளது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் பைன், ஸ்னோ வைட் மற்றும் ஸ்டார் டைமன்ட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

விலையை பொருத்தவரை புதிய விவோ Y300c ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 16,000 என்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 19,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Leave a Comment