90W சார்ஜிங், 256GB மெமரி… வேற லெவல் விவோ போன்… விரைவில் வெளியீடு

விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனின் டீசர் விவோ இந்தியா வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. டீசர் வீடியோவின் படி விவோ Y400 ப்ரோ 5ஜி மாடலில் இரட்டை பின்புற கேமரா சென்சார்கள் வழங்கப்படுவதாக உறுதியாகியுள்ளது.

மேலும், விவோ Y400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.77 இன்ச் AMOLED ஸ்கிரீன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இதில் 5500mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை எனினும், இந்த மாடல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டீசர் வீடியோவில் உள்ள ஸ்மார்ட்போன் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. இத்துடன் மாத்திரை வடிவில் இரட்டை கேமரா சென்சார்கள் உள்ளது. இந்த சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இறுக்கும் நிலையில், ரிங் எல்இடி ஃபிளாஷ் யூனிட் காணப்படுகிறது.

விவோ Y400 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ Y400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றில் 8 ஜிபி ரேம் ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, நெபுலா பர்ப்பில் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

விலையை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ரூ. 25,000 பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு, 90W பாஸ்ட் சார்ஜிங் மூலம் அதிவேக சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என தெரிகிறது.

Leave a Comment