கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல AI services இலவசமாக கொடுப்பதை பலர் கவனிச்சிருப்பாங்க. Chatbots, AI search tools, writing assistants, image generators என எல்லாத்துக்குமே ஃப்ரீமியம் சேவையா தான் இருக்கு. ஆனால் இந்திய பயனர்களுக்கு மட்டும் சில companyகள் free subscription, long term access offers மாதிரி கொடுக்குறாங்க. இதுக்கு பின்னாடி சில practical காரணங்கள் உள்ளதாம்.
முதல் காரணம், இந்தியாவில் பெரிய user market. கோடிக்கணக்கான smartphone users இருப்பதால் data நிறைய கிடைக்கும். அவர்களின் தினசரி AI usageஆல் AI companyகளுக்கு gold mine. இப்படி earlyஆ users பிடிச்சா, நாளைக்கு அவங்களையே paid usersஆ மாற்ற முடியும்.
இன்னொரு முக்கிய காரணம், AI trainingக்கு நிறைய data தேவைப்படும். AI tools smart ஆக வேலை செய்ய உண்மையான பயனர் இணைப்பு ரொம்ப முக்கியம். இந்திய பயனர்கள் Englishம், அவர்களின் regional languageஉம் mix பண்ணி use பண்ணுறது, அவர்களின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட கேள்வி என எல்லாமே AIயை இன்னும் better-ஆ train பண்ண உதவும். அதனால் India-வை testing ground மாதிரி use பண்ணுட்டு இருக்காங்க.
மூன்றாவது காரணம், போட்டி. Google, OpenAI, Perplexity, Microsoft என டாப் கம்பெனி எல்லாரும் ஒரே usersஐ தான் பிடிக்க try பண்ணுட்டு இருக்காங்க. ஒருத்தன் freeஆ கொடுத்தா, அடுத்தவனும் freeஆ தர வேண்டிய situation. இது pure business போட்டி தான்.
இதெல்லாம் பார்க்கும்போது, free AI subscriptions சேவை இல்லை. இது ஒரு நீண்டகால plan. Users build பண்ண, habit உருவாக்க தான் இந்த பக்கா திட்டம்.