உலகத்தில் முதல் முறையாக AI Chef மட்டும் சமையல் செய்யும் ரெஸ்டாரண்ட் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இதில் மனித சமையல்காரர் இல்லாமல், முழுக்க AI தொழில்நுட்பம் மற்றும் ரோபோ உணவு தயாரிப்பை கவனிக்கும்.
இந்த ரெஸ்டாரண்டில், வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்த உடனே, அந்த ஆர்டரை AI system சோதனை செய்யும். எந்த உணவு, எவ்வளவு நேரம், எந்த டெம்பரேச்சர், எந்த பொருட்கள் என்பதெல்லாம் AI தானாக கணக்கிட்டு, ரோபோ Chefகளுக்கு சொல்லிவிடும். அதன்படி சமையல் நடக்கும். எல்லாமே machineல் இருக்கும் என்பதால், ஒரே dish எத்தனை முறை சாப்பிட்டாலும் taste ஒரே மாதிரியாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த concept கொண்டு வரப்பட முக்கிய காரணமே speed, சுத்தம் மற்றும் ஒரே சுவை போன்றவற்றுக்கு தான். Human errorம் குறையும், kitchen cleanஆ இருக்கும், order delivery வேகமாக நடக்கும் என்பதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும், cooking முழுவதையும் screensல் liveஆ பார்க்கும் வசதியும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Menu details மற்றும் location பற்றிய முழு தகவல்கள் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் டெக் விரும்பிகளும், ஃபூட்டிகளும் புதிய experience தேடும் இளைஞர்களிடம் இந்த AI Chef restaurant பெரிய ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. Futureல் ரெஸ்டாரண்ட் அனுபவம் எப்படி மாறப்போகிறது என்பதற்கான ஒரு preview இதுதான்.