பட்ஜெட்டில் நல்ல கேமரா மொபைல் தேடுறீங்களா..? அப்போ உங்களுக்கான ஒரே சாய்ஸ் இதுதான்..

நவீன காலகட்டத்தில் செல்போன்கள் இல்லாத நபர்களே கிடையாது. செல்போன்கள் ஒருவர் மற்றவரிடம் பேச பயன்படுத்துவது தாண்டி ஆது பல பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது. அதிலும் கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் அருமையான நிகழ்வுகளை பதிவு செய்ய உதவுகிறது.

இன்று எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதை படம் பிடிப்பதற்கு உடனே நாம் பயன்படுத்தும் சாதனம் செல்போன் தான். எங்க திரும்பினாலும் மொபைல்கள் கேமராக்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாம் புது மொபைல் வாங்க போறோம் என்றால் முதலில் கடையில் சென்று கேட்பது கேமரா நல்லா இருக்குமா என்றுதான் கேட்போம். அப்படி கேமரா செல்போனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த வகையில் பட்ஜெட் விலையில் எது சிறந்த கேமரா மொபைல் என்று பார்ப்போம்

நல்ல கேமரா மொபைல் வாங்க வேண்டும் என்றால் சிறிது பட்ஜெட் அதிகப்படுத்த வேண்டும். குறைந்தது 20,000 முதல் 30,000 வரை அதற்கென்று தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டும் அப்படி அந்த பட்ஜெட்டில் சிறந்த கேமரா போனாக பார்க்கப்படுவது சியோமி 14 civi மொபைல். சென்ற ஆண்டு வெளியானது அப்பொழுது இதன் விலை 45,000 வரை விற்கப்பட்டது. தற்பொழுது இதன் விலை 30,000 மாக விலை குறைந்துள்ளது. இன்னும் சில ரீடையில் கடைகளில் இதன் விலை 26,000 ரூபாய் ரேஞ்சில் கிடைக்கிறது.

xiaomi 14 civi
xiaomi 14 civi

சியோமி 14 civi சிறப்பம்சங்கள் :
இதில் கேமரா அமைப்பை பொருத்தவரை 50 எம்பி லைட் ஹண்டர் 800 முதன்மை கேமரா உள்ளது. மேலும் இதில் 50 எம்பி 2x டெலி போட்டோ லென்ஸ் உடன் வருகிறது. மேலும் 12 எம்பி அல்ட்ரா வொயிட் கேமரா இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தெளிவான ஷார்ப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்.

மேலும் இதில் முன்பக்க செல்பி கேமராவை பொறுத்தவரையில் இரண்டு கேமராக்கள் உள்ளது. 32 எம்பி மெயின் கேமரா மற்றொன்று 32 எம்பி அல்ட்ரா வொயிட் செல்பி கேமரா உடன் வருகிறது. எடுக்கப்படுகின்ற புகைப்படங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்கும். தற்பொழுது வெளிவரும் எந்த மொபைலிலும் இவ்வளவு கிளாரிட்டியை எதிர் பார்க்கவே முடியாது. 4k 30fps வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. பட்ஜெட் விலையில் நீங்கள் ஒரு சிறந்த கேமரா மொபைல் வாங்க வேண்டும் என்றால் இதைவிட வேற ஆப்ஷன் கிடையாது.

இதில் 6.55 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே இதனுடன் 120 hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் hdr 10 பிளஸ் சப்போர்ட் 3000 நீட்ஸ் ப்ரைட்னஸும் உள்ளது. டிஸ்ப்ளே பாதுகாப்பை பொறுத்தவரையில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விட்டக்ஸ் 3 ப்ரொடக்சன் உள்ளது. பிராசசர் பொருத்தவரை குவால்கம் ஸ்னாப் டிராகன் 8 எஸ் ஜென் 3 சிப்சட் உடன் வருகிறது.

மேலும் இதில் ஆண்ட்ராய்டு 14 os உடன் வருகிறது. பேட்டரி பொருத்தவரையில் 4700mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 67 w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் 8 5g பேண்ட், 4ஜி, வைஃபை 6 ப்ளூடூத் 5.4, என்எஃப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் உள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் வேரியன்ட் கிடைக்கிறது. மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிலும் கிடைக்கிறது.

Leave a Comment