சியோமி நிறுவனம் தனது மிக்ஸ் ப்ளிப் 2 ஸ்மார்ட்போனினை நாளை (ஜூன் 26) அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ப்ளிப் போன் மாடல் முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதையொட்டி சியோமி கடந்த சில நாட்களாக பல்வேறு டீசர்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய சியோமி மிக்ஸ் ப்ளிப் 2 மாடலில் 4.01 இன்ச் கவர் ஸ்கிரீன், 6.86 இன்ச் உள்புற டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 5165mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போ் – பிளாக், கோல்டு, கிரீன் மற்றும் பர்ப்பில் என நான்கு நிறங்களில் கிடைக்கும்.
புதிய சியோமி மிக்ஸ் ப்ளிப் 2 மாடலின் தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 4.01 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் கவர் டிஸ்ப்ளேவில் கிட்டத்தட்ட 500 செயலிகளை பயன்படுத்தலாம் என்று சியோமி தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.86 இன்ச் மெயின் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும்.
சியோமி மிக்ஸ் ப்ளிப் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 5165mAh பேட்டரி, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்யும் மிக்ஸ் ப்ளிப் மாடலில் வழங்கப்பட்ட 4780mAh பேட்டரியை விட அதிகம் ஆகும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மத்தியில் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படுகிறது. மிக்ஸ் ப்ளிப் 2 மாடலில் புதிய ஹிஞ்ச் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
இந்த ப்ளிப் போன் அதிகபட்சம் 2,00,000 முறை மடிக்கக்கூடிய அளவுக்கு உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7.57mm தடிமனாக இருக்கிறது. இதன் எடை 199 கிராம்கள் ஆகும். புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் லெய்கா பிரான்டு லென்ஸ் வழங்கப்படுகிறது.
இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதன்படி சியோமி மிக்ஸ் ப்ளிப் 2 ஸ்மார்ட்போன் 2505AMPX7BC மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ், 10.86 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. கீக்பென்ச் டெஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டில் 3099 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 9583 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.
சியோமி மிக்ஸ் ப்ளிப் 2 மாடல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆக்டா-கோர் பிராசஸரில் ஆறு கோர்கள் 3.53Ghz-லும், இரண்டு CPU கோர்கள் 4.32GHz-லும் கிளாக் செய்யப்பட்டுள்ளன.
நாளை நடைபெறும் மிக்ஸ் ப்ளிப் 2 வெளியீட்டு நிகழ்விலேயே சியோமி நிறுவனம் ரெட்மி K80 அல்ட்ரா, சியோமி Pad 7S ப்ரோ, ரெட்மி K பேட் மற்றும் சியோமி YU7 உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.