8850mAh பேட்டரி, 45W சார்ஜிங்… Pad 7 மாடலுக்கு சூப்பர் ஆஃபர் அறிவித்த சியோமி

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Pad 7 டேப்லெட் மாடலை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த டேப்லெட் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 11.16 இன்ச் டிஸ்ப்ளே, 3.2K ரெசல்யூஷன், டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இவற்றுடன் இந்த டேப்லெட்டில் உள்ள குவாட் ஸ்பீக்கர் செட்டப் தலைசிறந்த ஆடியோ அனுபவம் கொடுப்பதை உறுதிப்படுத்துகிறது. பலவித நிறங்களில் கிடைக்கும் சியோமி Pad 7 மாடலில் வைபை 6 சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த டேப்லெட் 8850mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஃபோக்கஸ் கீபோர்டு மற்றும் பேக்லிட் கீ வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை குறைப்பு விவரங்கள்:

சியோமி Pad 7 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தள்ளுபடி கூப்பன் மூலம் ரூ. 1000 விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இது டேப்லெட்டின் விலையை ரூ. 25,999 என குறைக்கிறது. பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2,000 தள்ளுபடி பெற முடியும். இது டேப்லெட்டின் விலையை ரூ. 23,999 என மாற்றிவிடும்.

Leave a Comment