இன்றைய காலகட்டத்தில் எங்கு சென்றாலும் பணப்பரிவர்ததனை செய்ய ஏடிஎம் கார்டுகளை விட அதிகம் யு பி ஐ பேமண்ட்களை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் உடனடி தேவைகளுக்கு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் சென்டர் எங்கு உள்ளது என்று தேடி அலைய வேண்டாம். மேலும் சென்டரில் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு ஸ்கேன் செய்வதன் மூலம் பண பரிவர்த்தனையை மிக சுலபமாக செய்ய முடியும்.

என்னதான் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தாலும் அதில் உள்ள ஒரு சில குறைபாடுகள் அவர்களை ஏமாற்றவும் வழி வகுக்கிறது. அப்படி யு பி ஐ பேமென்ட் மூலம் மோசடியை தடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதாவது என் சி பி ஐ இந்த யுபிஐ முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது.
நாம் பயன்படுத்தும் போன் பே, கூகுள் பே, பேடிஎம் பே போன்ற அனைத்து செயலிகளின் மூலம் பணப்பரிவர்தனை செய்யும் போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுண்டில் உள்ள பேரை மட்டும் காண்பிக்கும். இதற்கு முன்னர் ஸ்கேன் செய்யும் பொழுது அந்தப் பெயருக்கு முன்பு அல்லது பின்னாடி ஏதாவது புனைப்பெயர்கள் சேர்க்கப்பட்டு வருவதுண்டு.
இனி அந்த மாதிரி புனைப்பெயர்கள் வராது. பெறுநரின் வங்கி கணக்கில் என்ன பெயர் கொடுத்துள்ளாரோ அதே பெயர் தான் இதில் காண்பிக்கும். இது பியர் டு பியர், பியர் டு பியர் மெர்ச்சன்ட் என அனைத்து வகை பேமெண்ட்களுக்கும் இது பொருந்தும். இந்த நடைமுறை வருகிற ஜூன் 30-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இது இந்தியாவில் உள்ள அனைத்து யூபிஐ பண பரிவர்த்தனை செய்யும் செயலிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு செய்வதன் மூலம் யுபிஐ பணம் மோசடியை தடுக்க முடியும் என்று கூறுகின்றன. மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.