19.2 சதவீத வாக்குகளை தவெக பெறும்!.. வெளியான கருத்துக்கணிப்பு!..

நட்சத்திர நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் துவங்கினார். விஜய்க்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் தனது ரசிகர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை விஜய்க்கு இருக்கிறது.. ஒரு பக்கம் பொதுமக்களின் ஆதரவும் தனக்கு கிடைக்கும் என விஜய் நம்புகிறார்..

அதேநேரம், தவெகவில் விஜயை தவிர வேற எந்த பிரபலங்களும் இல்லை.. அரசியல் தலைவர்களும் இல்லை.. எல்லாமே புதியவர்கள். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் மட்டும் அந்த கட்சியில் இணைந்திருக்கிறார். ஆனாலும் அந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும் 15 முதல் 20 சதவீத வாக்குகளை விஜய் வாங்குவார் என பலரும் சொல்லி வருகிறார்கள்..

இந்நிலையில், Voter Vibe என்கிற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 19.2 சதவீத வாக்குகளை வாங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் திமுக 35.8 சதவீத வாக்குகளும், அதிமுக 33.8 சதவீத வாக்குகளும் வாங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment