latest news
ரெண்டு கண்ணு கையில கன்னு… இது தான் என் பார்முலா…அசால்டு சொஞ்ச சாம்பியன்…

ஃபரான்ஸ் தலை நகர் பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகரத்துவங்கியுள்ளது. இதுவரை ஒலிம்பிக் தொடர்களில் அதிகம் சோபிக்காத இந்திய வீரர்கள் பதக்கப் பட்டியலில் முன்னேற தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே துப்பாக்கி சுடுதல் தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ள இந்திய வீராங்கனை மனு பாக்கர் மூன்றாவது பதக்கத்தை வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வந்து துப்பாக்கி சுடுதல் ஆண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற துருக்கி வீரர் யூசப் டெயிக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது பேன்ட் பாக்கெட்டிற்குள் ஒரு கையை விட்ட படி,மற்றொரு கையில் துப்பாக்கியை பிடித்து இலக்கை குறி பார்த்து சுடுதலில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

Yusuf Deik
போட்டியின் போது தனது நடவடிக்கை குறித்து சொல்லியிருக்கும் யூசுப், தான் ஒரு யதார்த்த வீரன் என்றும், தனக்கு எப்போதும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்பட்டதில்லை, தான் துப்பாக்கியை கையாளும் விதம் உலகிலேயே மிகவும் அரிதானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
தனது இரண்டு கண்களை திறந்து வைத்துக் கொண்டே தான் கையில் துப்பாக்கியை பிடித்து சுடுவேன். போட்டியை கண்காணிக்கும் நடுவர்கள் யூசுபின் இந்த செயல்களைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.
இதற்காக தான் அதிகம் உழைத்துள்ளதாகவும் கூறியுள்ள யூசுப், பாக்கெட்டில் கை வைத்துக் கொண்டால் மட்டுமே வெற்றி தேடி வராது, அதற்காக அயராது உழைக்க வேண்டும் எனக்கூறினார். இதுவரை நடந்துள்ள துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் யூசுப் மட்டுமே தனது நடவடிக்கையில் தனித்துவத்தை காட்டியவர் என சொல்லப்படுகிறது.
