india
கவலைப்படாதீங்க நான் காவலுக்கு இருக்கேன்… கண்ணீர் வரவழைத்த காட்டு யானை…
கேரளா மாநிலம் வயநாட்டின் மூன்று இடங்களில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவால் நூற்றுக்கணககானோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவினால் மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. திரும்பும் திசை எல்லாம் மரண ஓலம், காணாமல் போனவர்களை பயம் கலந்த தேடலுடன் சுற்றி, சுற்றி வந்த உறவினர்கள் என நினைத்துப் பார்த்தாலே நெஞ்சை கசக்கி பிழியும் காட்சிகளின் நிலை தான் இருந்தது வயநாட்டில்.
மீட்புக்குழுவினரின் பெரும் முயற்சியால் இயல்பு நிலை நோக்கி திரும்பத்துவங்கி வருகிறது வயநாடு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்த சோகத்தை கொடுத்தது இந்த நிலச்சரவு. மீட்புப் பணிகள் முழுவீச்சில் தொடரந்து நடத்தப்பட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தனது வீட்டிற்குள் திடீரென வெள்ள நீர் புகுந்ததால் தனது பேத்தியை இடுப்பில் தூக்கியவாரு என்ன செய்வது எனத் தெரியாமல் அருகே இருந்த தேயிலை தோட்டத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார் சரோஜா என்ற மூதாட்டி.
எங்கு பாதை இருக்கிறது, எங்கே போய் முடியும் இந்தப் பயணம் என்பது தெரியாமலேயே உயிர் பிழைத்தால் மட்டும் போதும் என தோட்டத்திற்குள் வேகமாக சென்றிருக்கிறார். அப்போது அங்கே சரோஜா கண்ட காட்சி மரணம் தன்னை விட்டு வைக்கப்போவதில்லை என்ற எண்ணத்தை தூண்டும் படி தான் அமைந்திருக்கிறது.
துதிக்கையை தூக்கி நின்ற படி மூன்று காட்டு யானைகள் சரோஜா மற்றும் அவரது பேத்தியை வரவேற்திருக்கிறது. இதற்கு மேலே என்னால ஒன்னும் செய்ய முடியாது, எங்களை ஒன்னும் செஞ்சிடாதே என அருகே வந்த ஒரு காட்டு யானையிடம் கைக்கூப்பியந் படி சொல்லிவயிருக்கிறார். சரோஜா காட்டு யானையிடம் இப்படி சொல்லும் போது யானையின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததாம்.
சிறிது நேரத்தில் பக்கத்தில் இருந்த மரத்தடிக்கு சென்று உட்கார்ந்து விட்டதாம். மீட்புக்குழுவினர் அங்கே வந்து சரோஜாவும் அவரது பேத்தியையும் மீட்கும் வரை யானை அந்த மரத்தடியை விட்டு நகரவில்லையாம். உயிரைக் காப்பாற்றி தேயிலை தோட்டத்திற்குள் சென்ற போது அங்கே நடந்த நெகிழ்ச்சியான இந்த சம்பவம் குறித்து சரோஜா பேசிய ஆடியோ இப்பொது வைரலாக பரவி வருகிறது.