Connect with us

latest news

வெறும் ரூ.8,499-க்கு 5ஜி போன்.. விரைவில் வெளியீடு.. எந்த மாடல்?

Published

on

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ரெட்மி பிரான்டின் புதிய என்ட்ரி லெவல் மாடல் ஆகும். மேலும் இந்திய சந்தையில் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெறும் என்று கூறப்படுகிறது. ரெட்மி A4 5ஜி பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி புதிய ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,499 முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த விலை அறிமுக சலுகை மற்றும் தள்ளுபடிகளை சேர்த்தது ஆகும். இதே விலைக்கு விற்பனைக்கும் வரும் பட்சத்தில் இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும். இந்த ஸ்மார்ட்போனின் மெமரி வேரியண்ட்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

எனினும், இதில் குறைந்தபட்சம் 4GB ரேம், 128GB மெமரி வழங்கப்படலாம். முன்னதாக இந்தியன் மொபைல் காங்கிரஸ் விழாவில் அந்நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 10,000-க்குள் நிர்ணயம் செய்ய திட்டமிடுவதாக தெரிவித்து இருந்தது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி A4 5ஜி மாடலில் 6.7 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 1.0 கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18W சார்ஜிங் வழங்கப்படுகிறது.

இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி சி போர்ட் வழங்கப்படுகிறது. அனைவரும் வாங்கக்கூடிய விலையில் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போனாக இந்த மாடல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் வெளியீடு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ நடைபெறும் என்று கூறப்படுகிறது.

google news