தலைமுடி உதிர்வு பிரச்சனையா.. கவலைய விடுங்க.. இனிமே இத பாலோ பண்ணுங்க..

தலை முடி உதிர்வு பிரச்சனை இன்று பரவலாக காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று. வேகமாக நகர்ந்து செல்லும் காலநிலை மாற்றங்களாலும் துரித உணவு பழக்கங்களின் காரணமாக ஆண், பெண் என இரு பாலருக்கும் இன்று முடி உதிர்வு பிரச்சினை காணப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் இதை சரி செய்ய பல வகை மருந்துக்களுக்காக தேவையற்ற செலவுகள் செய்கின்றனர். நாம் இவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு கடைகளில் எளிமையாக கிடைக்கக்கூடிய கம்பு போன்ற தானியங்களை பயன்படுத்துவதால் இத்தகைய பிரச்சனையில் இருந்து நிரந்தரவு தீர்வு காண முடியும்.

கம்பு
கம்பு

கம்பில் பீட்டா கிரையோட்டின் என்ற ஒரு கரிமச் சேர்மம் இருக்கிறது. இது தலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி கருகருவென அடர்த்தியாக முடியை வளர உதவி செய்கிறது. கம்மங்கூழ், கம்பு இட்லி போன்றவைகளை வீட்டில் செய்து சாப்பிட்டு வந்தால் போதுமானது.

ஆனால் இன்றைய காலத்தில் இளைஞர்கள் அதை எல்லாம் விட்டுவிட்டு மாத்திரையை தேடி அலைகிறார்கள். இன்று மருந்து கடையில் விற்கப்படும் ஆங்கில மருந்துகளும் இந்த பீட்டா கிரையோட்டினை தான் மாத்திரையாக செய்து விற்பனை செய்கின்றார்கள். மாத்திரை போன்ற வைகளை தவிர்த்து கம்பு போன்ற தானியங்களை தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் எடுத்து வந்தால் தேவையற்ற செலவுகளை குறைப்பதுடன் முடியும் அழகாக வளர்ச்சி அடையும்.

Leave a Comment