புஸ்ஸி ஆனந்திற்கு முத்த மழை!.. ஈரோட்டில் தவெக தொண்டர்களின் அத்துமீறிய அன்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்கள் குவியத் தொடங்கிய நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களிடம் காட்டிய நெருக்கம் பெரும் வைரலாகி வருகிறது.

திணறிய நிர்வாகி.. தெறித்த அன்பு:

கூட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த புஸ்ஸி ஆனந்தைப் பார்த்ததும், அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் உற்சாக மிகுதியில் அவரைச் சூழ்ந்து கொண்டனர். “தலைவரின் தளபதி வாழ்க” என கோஷமிட்டபடி, முண்டியடித்துக் கொண்டு அவரிடம் கைகுலுக்க முயன்றனர்.

bussy anand
bussy anand

அப்போது, சில தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்தின் கன்னத்தைப் பிடித்து இழுத்து, அவருக்கு முத்த மழை பொழிந்தனர். தொண்டர்களின் இந்த அதீத அன்பால் புஸ்ஸி ஆனந்த் சற்று நிலைகுலைந்தாலும், சிரித்த முகத்துடனேயே அவர்களைக் கையாண்டார்.

பாதுகாப்பு அதிகரிப்பு:

ஈரோடு விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த கூட்டத்திற்கு 80-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. பொதுச்செயலாளருக்கே இவ்வளவு கூட்டம் கூடி முத்த மழையில் நனைய வைப்பதால், தலைவர் விஜய் வரும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment