அண்ணாமலை எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பு? பாஜக ஜீரோ, ஆனால் அதிமுக ஆட்சி உறுதி.. அதிமுகவுக்கு 115 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்பு.. திமுகவுக்கு 80.. தவெகவுக்கு 30.. ரிசல்ட் வந்த பிறகாவது அண்ணாமலையின் அருமை டெல்லி தலைமைக்கு தெரியுமா?

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டிய பரபரப்புகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு ரகசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் தீயாய் பரவி வருகின்றன.

தமிழகத்தில் பாஜகவை ஒரு மாற்று சக்தியாக நிலைநிறுத்த அண்ணாமலை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களையும், நடைப்பயணங்களையும் மேற்கொண்டார். இருப்பினும், தற்போது கசிந்துள்ள இந்த ரகசிய ஆய்வின் முடிவுகள் அண்ணாமலைக்கும், பாஜக டெல்லி தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற கசப்பான உண்மை வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம், இந்த கருத்துக்கணிப்பு அதிமுக தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அதிமுக 115 முதல் 120 தொகுதிகள் வரை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை அமைப்பது உறுதி என்று அந்த ஆய்வு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக, ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தியை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டிருப்பதை இந்த எண்கள் காட்டுகின்றன. மறுபுறம், ஆளுங்கட்சியான திமுக 80 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ முதல் தேர்தலிலேயே 30 தொகுதிகள் வரை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியின் வரவை உறுதிப்படுத்துகிறது. விஜய்யின் இந்த தாக்கம் தான் திமுக மற்றும் பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை பறித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த ரகசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் அண்ணாமலையின் கருத்துக்களை மதிக்காமல் டெல்லி தன்னிச்சையாக எடுத்த முடிவின் விளைவாக தெரிகிறது.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகாவது அண்ணாமலையின் தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் அவர் வகுத்த வியூகங்களின் ‘அருமை’ டெல்லி பாஜக தலைமைக்கு புரியுமா என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பேசப்பட்ட ‘அண்ணாமலை மாடல்’ வாக்குகளாக மாற தவறியது ஏன் என்பது குறித்த விவாதங்கள் தேர்தலுக்கு பின் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை நம்ப வேண்டாம், அவர் நம்ப வைத்து கழுத்தறுத்துவிடுவார் என்று அண்ணாமலை சொன்னதை டெல்லி கேட்காததுதான் பாஜகவை பூஜ்ஜியத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாக கட்சிக்குள்ளேயே முணுமுணுப்புகள் கேட்கின்றன.

 

Leave a Comment