தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பழமையான ஓலைச்சுவடி ஜோதிட கணிப்புகள் மற்றும் நாடி ஜோதிட முடிவுகள் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த காலங்களில் தமிழக மற்றும் இந்திய அரசியலில் முக்கிய தலைவர்களின் வெற்றி குறித்து நாடி ஜோதிடத்தில் சொல்லப்பட்ட கணிப்புகள் பலவும் துல்லியமாக நடந்துள்ளதை சுட்டிக்காட்டும் இந்த ஆரூடங்கள், வருங்கால அரசியல் மாற்றங்கள் குறித்தும் சில அதிரடியான தகவல்களைத் தந்துள்ளன. குறிப்பாக, தெய்வீக அருளாசி பெற்றவர்களே இனி நாட்டை ஆளப்போகிறார்கள் என்பது இந்த ஜோதிட கணிப்புகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு ஓலைச்சுவடி பார்க்கப்பட்டபோது, பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்று நாடி ஜோதிடத்தில் வந்த கணிப்பு அப்படியே பலித்தது. அதேபோல, 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருந்தபோதும், அவரே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவார் என்று கணித்ததும் உண்மையானது. இத்தகைய துல்லியமான கடந்த கால கணிப்புகள், தற்போது சொல்லப்படும் வருங்கால கணிப்புகளின் மீது மக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சி காலத்தில், கட்சியில் நிலவிய கடுமையான உட்கட்சி பூசல்கள் மற்றும் இக்கட்டான சூழல்களின்போது, அவர் தனது ராஜதந்திரத்தால் கட்சியை ஒன்றிணைத்து ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி புரிவார் என்று ஓலைச்சுவடியில் இருந்தது. அது போலவே அவர் தனது ஆட்சி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
அதே நேரத்தில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பார்க்கப்பட்டபோது, ஒரு பெரும் இழப்பிற்கு பிறகே அவருக்கு தலைமை பொறுப்பு கிடைக்கும் என்று ஓலையில் வந்திருந்தது. கலைஞர் அவர்களின் மறைவிற்கு பிறகு அவர் தலைமை ஏற்றது அந்தத் துல்லியமான கணிப்பிற்கு சான்றாக அமைந்தது.
தற்போது வருங்கால அரசியல் குறித்து ஆரூட காண்டத்தில் இருந்து பெறப்பட்ட மிக முக்கியமான தகவல் என்னவென்றால், “நாடாழ்வான் இளைய மகன்” என்பதாகும். சிவபெருமானின் முதல் மகன் விநாயகர், இரண்டாவது மகனான முருக பெருமானின் பெயரை கொண்டவர்களே வருங்கால ஆட்சியை அமைக்கப்போகிறார்கள் என்று ஓலைச்சுவடி முடிவுகள் தெரிவிக்கின்றன. இது தமிழக அரசியலில் ‘முருகன்’ என்ற பெயருடன் தொடர்புடைய தலைவர்கள் அல்லது அத்தகைய அடையாளங்களைக் கொண்டவர்கள் அதிகாரத்தை கைப்பற்றக்கூடும் என்ற புதிய விவாதத்தை தூண்டியுள்ளது. அப்படியென்றால் முருகனின் பெயர் கொண்ட பழனிசாமி தான் அடுத்த முதல்வரா?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், “தெய்வீகம் ஆள வரும், அருளே வெல்லும்” என்ற அடிப்படையில் ஆன்மீக பலமும் தெய்வீக அருளும் கொண்ட ஒரு தலைமையே தமிழகத்தையும் நாட்டையும் ஆளப்போகிறது என்பது இந்த நாடி ஜோதிட கணிப்புகளின் சாரமாக உள்ளது. பல தேர்தல்களில் கடந்த காலத் தீர்ப்புகளை முன்கூட்டியே சரியாக கணித்த இந்த ஓலைச்சுவடி முடிவுகள், வரும் காலத்திலும் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை உறுதி செய்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.